Monday, 21 December 2015

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.
வழக்கம் போல் அன்றும் சாளரத்தை த் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களி ல் ஒரு பிச்சைக்காரன் தான் தோன் றினான். போயும் போயும் இவன் முக த்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவ ரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டி யது. வலியோ பொறுக்க முடியவில் லை.
அத்துடன் கோபம் வேறு பொங் கியது…
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச் சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கி னான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.
அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது… பைத்திய க்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என் று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டு ம் தான் ஏற்பட்டது.
ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந் து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.
Moral : மூட நம்பிக்கைகள் நம்மை மூடன் ஆக்கிவிடும்.மூட நம்பிக்கைகளைத் தவிர்த்து, தன்னம்பிக்கையுடன் வாழ்பவன் எவனோ அவனே வாழ்க்கையை வெல்வான்.

Friday, 11 December 2015

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....

விரட்டி விரட்டி காதலிக்கும்
போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது
அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....

காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய
வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

யாரேனும் நம்மை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
வீட்டிற்க்கு
வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்.....

யார்கூடவும் பகிர்ந்து
கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

நாம் முதல் முறை காதலை
சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்...

நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்க்காத போதும்
நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்....

எதுவும் வேணுமா என்று
கேட்டாலும்
நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு
என்று
நம்மளையே அசத்தவைக்கும்
போது
பெண்களில் காதல் அழகோ
அழகுதான் .....

நம்மோடு பகிர்ந்து கொள்ள
முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தனியாக தலையனையோடு
பகிர்ந்து
கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....

ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின்
காதல்
அழகோ அழகுதான் ......

இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது
பெண்கள்தான்....

ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில் .,
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும் .,
ஆனால்
பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே
அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....

சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
தான் ..

நம் கைகோர்த்து நடக்க
நம் மடிசாய்ந்து உறங்க
நம் தோல் சாய்ந்து அமர
நம் நெஞ்சினில்
சாய்ந்துகொள்ள
நம்மோடு மனம் திறந்து பேச
நம் நெஞ்சினில் இருக்கும்
முடியை
இழுத்து விளையாட
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து
நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்.... kiss emoticon

இந்த காதல் வானில்
சிறகொடிந்த
பறவைகளே அதிகம்.,
அதிலும்
ஆண் பறவைகளை விட 
பெண் பறவைகளே அதிகம் ..

மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு
மனமில்லாமல் போவது
ஒருவனோடு .,
காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை ..

பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு.....
என்றுமே ஆண்களின் காதலை விட
பெண்களின்
காதலில்தான் அழகும் வலியும்
அதிகம் ..

எதிர் காலத்தில் உங்களுக்கு
மனைவியாக
வருபவர் கூட
யாரோ ஒருவரால் காதலிக்க
பட்டிருக்கலாம்
அதனால் அவர்களையும் 
உங்கள் காதலி போல
நினைச்சு நேசிக்கலாமே!!!!

ஏன்
என்றால்
நீங்களும்
ஒருவரை காதலித்து இருக்கலாம்
அதன்
வலி
உங்களுக்கும் தெரியும்
என்பதால்..

Tuesday, 24 November 2015

உங்கள் துரோகத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன், என் பயமெல்லாம் உங்கள் மீது நான் மீண்டும் அன்பு செலுத்திடுவேனோ என்பது தான்.

Saturday, 14 November 2015

⚡ நீதிக் கதை ⚡⚡

ஒரு கிராமத்தில்ஓநாய் ஒன்று தன் குட்டியுடன் வாழ்ந்துவந்தது.
ஒரு நாள் ஓநாய்குட்டி தன் தாயிடம்
"எனக்கு மனிதனுடைய மாமிசம் சாப்பிட வேண்டும்" என்றது.
ஓநாய் அலைந்து திரிந்தும் மனிதமாமிசம் கிடைக்காததால் பன்றியின் மாமிசத்தை கொண்டுவந்து கொடுத்தது.
அதை முகர்ந்து பார்த்த குட்டி
"இது பன்றிக்கறி எனக்கு வேண்டாம்.
மனிதமாமிசம்தான் வேண்டும் என்றது.
மீண்டும் அலைந்துதிரிந்த ஓநாய் மனிதமாமிசம் கிடைக்காததால் மாட்டிறைச்சியை கொண்டுவந்து கொடுத்தது.
அதை உண்ண மறுத்த குட்டி
மனித இறைச்சிக்காக அடம்பிடித்தது.
அப்போது ஓநாய் மனதில் ஒரு திட்டம் தோன்றியது.
அன்றிரவு அங்குள்ள பள்ளிவாசலில் பன்றிக் கறியையும்
கோவிலில் மாட்டிறைச்சியையும் வைத்துவிட்டு வந்துவிட்டது.
மறுநாள் காலை சென்று பார்க்கும்போது ஊர் முழுவதும் மனிதஉடல்கள் சிதறிகிடந்தன.
ஓநாயும் குட்டியும் ஆசைத்தீர மனிதமாமிசத்தை உண்டு தங்களது பசியை தீர்த்துகொண்டன.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று குட்டி தன் தாயிடம் வினவியது.
அதற்குஓநாய்
"90% முட்டாள்கள் வாழும் தேசத்தில் எல்லாமே சாத்தியம்தான்"
என்று சொல்லி சிரித்தது.

Wednesday, 11 November 2015

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி

ஆபாச தகவல் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? அதிகமாக ஷேர் செய்யவும்…!!

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி?
1. முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.
2. பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.
3. Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock..

Sunday, 1 November 2015

திருமணத்திற்க்கு_பின்_காதலித்தால்_இப்படித்_தான்_இருக்கும்...

காலையில் அவளை முத்தமிட்டு எழுப்பி ஒரு காஃபி கொடுத்தால் போதும்,
இரவு நான் உறங்கும் வரை எனக்குத் தேவையானதைச் செய்ய பம்பரமாய் சுழல்வாள்.

பின்னிருந்து அணைத்தபடியே அவளுக்கு சமையல் கற்றுக் கொடுக்கிறேன்,
என் ஆசையெல்லாம் அவள் கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.!!

பசிக்கிறது என்று நான் சொன்னதும் என்னை அவள் முத்தமிடுகிறாள் என்றால் ,இன்னும் சமையல் தயாராகவில்லை என்று அர்த்தம்..!!

சமைத்ததை கையில் கொடுத்து ருசி பார்க்கச் சொல்லியிருந்தால் உப்பில்லை என்று சொல்லியிருப்பேன்,
ஊட்டிவிட்டுக் கேட்கும் அவளிடம் எப்படிச் சொல்வது ..?

* தோட்டத்தில் நீ நின்றிருந்த போது
உன்னை உரசிச் சென்ற வண்டு , மற்றொரு வண்டிடம் கேட்டது.... வாசனை புதிதாய் இருக்கிறதே இது என்ன பூ என்று !!!

* மழைக்காக அவளும் இடிக்காக நானும் காத்திருக்கிறோம்,
இதோ மின்னல் தென்படுகிறது,..
அவள் என்னைத் தழுவிக்கொள்ள இன்னும் சில விநாடிகளே உள்ளது.!!

* என் போர்வையைத் துவைக்கும்போது மட்டும் ஏன் இவ்வளவு அக்கரை என்றேன் ,
என் இடத்தை நிரப்பும் அனைத்தின் மீதும் அப்படித்தான் என்கிறாள் !!!.

* உன் குரல் கேட்காத நாட்களில்,
நான் கேட்ட எதுவும் என் நினைவில் இருப்பதில்லை ..!!

* என்னை வீழ்த்த அம்பு செலுத்த தேவையில்லை
அன்பு செலுத்தினால் போதும் அன்பே
நேற்று வரை உன்னோடு தான் என் வாழ்க்கை என்று இருந்தேன் ஆனால் இப்போது உன் நினைவுகள் உடன் என்றாகி விட்டது.......
வார்த்தைகளுக்கு வேண்டுமானால் விலைமதிப்பு இல்லாமல் இருக்கலாம்.. 
ஆனால் நம்பிக்கை என்பது நம் மீது ஒருவர் கொடுக்கப்பட்ட மதிப்பு மரியாதைக்கு அடையாளம்..!

Tuesday, 27 October 2015

யாரு இடமும் கெஞ்சாதே உன் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று..அவர்கள் நீ முட்டாள் என்று உணர்த்த பாடம் கற்பிக்க வந்தவர்கள்.
உனக்கு பிடித்தால் எனக்கும் பிடிக்கு என்று தொடங்கி உனக்கு எனக்கு வேற "Taste" சொல்லி முடிகிறது காதல்

Monday, 26 October 2015

காதல் கொடுத்த காயங்களை விட 
காதலன்/காதலி கொடுத்த வடுக்களை மறைக்க முடியாது
காதலின் சுகம் பற்றி அறிய, பழைய வாழ்வின் நினைவுகளைத்தான் அசை போட வேண்டும் என்பது துரதிர்ஷ்டமான மனப்போக்கு.

காதல் என்பது குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே வாழ்ந்து முடிவதல்ல. உருவ மாற்றத்தாலோ, உறவாகிவிட்டதாலோ, வயதாலோ உதிர்ந்து போய் விடுவதில்லை காதல்

Sunday, 25 October 2015

நான் உன்னை பார்க்காமல் போயிருந்தால் என் வாழ்க்கையில்
காதல் என்றால் என்ன என்ற தெரியாமல் போய் இருக்கும்.

நீ என்னை
விட்டு உயிர்பிரிந்தாலும்
உன் அன்பு ஆள்கடலினும்
பெரியது தான்
என்றும் நம்
நினைவலைகளுடன்
நான்  

Monday, 19 October 2015

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான்..

அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்..

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.

எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.
உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.

அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.

மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.

Wednesday, 14 October 2015

மனைவி கணவனைத் திட்டுவது குளத்தில் கல் எறிவது போல .. 
ஆனா ...
கணவன் மனைவியைத் திட்டுவது தேன் கூட்டில் கல் எறிவது போல ...suganthi

Tuesday, 13 October 2015

சிலரிடம் இருந்து
கிடைத்த கசந்த
நினைவுகளை மறப்பதற்கு
அவர்களை விட்டு
விலகி இருப்பதில்
தவறில்லை..!

Saturday, 10 October 2015

   நல்ல புத்தகம் , வாழ்க்கையை புரட்ட வேண்டும். 
நல்ல வாழ்க்கை, மற்றவருக்கு புத்தகமாக வேண்டும்...!

Thursday, 8 October 2015

ஒரு துரோகத்தில்
ஒட்டு மொத்த அன்பும்
விஷமாகிறது....
ஒட்டு
மொத்த நம்பிக்கையும்
அழிந்து போகிறது.....!!!!

Wednesday, 7 October 2015

என் மகள்- தந்தை

பேஸ்புக் பகிர்வு: '

என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து !'


பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.

மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:

"இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.

அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.

அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அன்பிற்குரிய மருமகனே...இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.

Tuesday, 6 October 2015

எமக்கு அவமானம் நேரும் எனத் தெரியும் இடத்திலிருந்து விலகி இருத்தலே சாலச்சிறந்தது...!!

Sunday, 4 October 2015

விதி

இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்....ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.....அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்....உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி , இந்தகிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்... கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே ? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்....
விஷயத்தை கேட்ட பிரம்மா , இந்திரா.... படைப்பது மட்டுமே என் வேலை...உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்...நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார்....
மஹாவிஷ்ணுவோ , உயிர்களை காப்பது நான்தான் ...ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில்,இருக்கிறது.....அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்...வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார்....
விபரங்களை கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்...உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்...வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார்....
தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்..விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில் , . எந்த சூழ் நிலையில் , என்ன கார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்..அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்....வாருங்கள் அந்த அறைக்குசென்று , கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்....
இப்படியாக , இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்... ....அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது...உடனே அவர்கள் அவசரமாக சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்..அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.....அவசரமாக அதைப்படித்து பார்க்கின்றனர்....
அதில்......
இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ , அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது...... இதுதான் விதி என்பதோ?