Sunday, 26 July 2015

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள்
எவ்வளவு சுவையாக இருந்தாலும்
உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும்
பரவாயில்லை. விருப்பமான
துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும்
முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக்
கட்டி விடுங்கள். வேண்டாத
செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன்
கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை,
உப்பு ஆகியவற்றை கணிசமாகக்
குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள்.
பேசுகையில் கண்களைப் பார்த்துப்
பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும்
உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல்
எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய
சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும்
அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக்
கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள்
தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும்
அக்கறையை உணர்த்துங்கள்.

Monday, 20 July 2015

தாயும் மகளும் விளையாடுகையில் கவனித்துப்பாருங்கள், மகள்தான் விளையாட்டுக்காட்டி அம்மாவை சிரிக்க வைப்பாள்..

உடலுறவு மட்டுமல்ல;
தொட்டுக்கொண்டேயிருக்க விரும்புவதும்,
கட்டிக்கொண்டு சாகத்தோன்றுவதும்,
காமம்தான்
ஆம் காதல் என்றால் காமம்தான்.

Saturday, 18 July 2015

உன் தனிமையில் என்னை மட்டுமே தேடுகிறாய்
வேறு என்ன வேண்டும் எனக்கு

திமிர் இல்லாட்டி கண்டிப்பா வாழ்க்கைல சாதிக்க முடியாது;

ஆணவம் இருந்தா கண்டிப்பா வாழ்க்கலை சாதிக்க முடியாது...!!!

Feel the difference!
😊😊😊

இப்பல்லாம் குழந்தைப் பருவமென்பது கைக்குழந்தைப் பருவத்தோடு முடிந்து விடுகிறது

எல்லா இடத்திலும் முகம் சுளிக்காமல் லஞ்சம் குடுத்துட்டு சாக்கடை அள்றவங்கட்ட போய் 'கவர்ண்மெண்ட் சம்பளம் குடுக்குதுல்ல?' ன்றாங்க.

துரோகத்துக்கும், அவமானத்திற்கும் பிறகும் வாழ்ந்து காட்டுவதே ஆகச்சிறந்த பழிவாங்குதல்.!!

அன்பை எதிர்பார்க்கும் போது மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது!
மரியாதையை எதிர்பார்க்கும் போது
அன்பை எதிர்பார்க்கக் கூடாது!!

@என்ன பண்றது இந்த மானம்கெட்ம மனசு ரெனண்டையுமே எதிர்பாக்குதே! @archanabaluit

பணக்காரன்...தீடீரென ஏழையாகும் போது தெரியும்...பணம் நிலையானதல்ல என்று...

கயிறு அறுந்தபோது தான்
பட்டத்துக்குத் தெரிந்தது
உயரம் தனதல்ல என்று ...!

நீண்ட காத்திருத்தலுக்குபின் ஒருவரின் அலைபேசிக்கு அழைக்கையில்.... 'ஸ்விட்ச்ஆப்' செய்யப்பட்டுள்ளது எனும் வார்த்தை எதையெதையோ யோசிக்க வைக்கிறது.

எவ்வலோதான் மனம் உறுதியாக இருந்தாலும் ..
காதல் தோல்வி அதை தகர்த்து விடுகிறது ..
#கண்ணுல தண்ணி பீரிட்டு வருது

கொடுக்கும் சம்பளத்திற்கு வந்து தான் போக முடியும் வேலை பார்க்க சொன்னால் தேவையில்லாத விளைவுகளை சந்திக்க நேரிடும் ஓனர்களே !

மிகவும் பிடித்த. .ஆனால் செய்யத் தயங்கும் விசயங்களை ஒருமுறையாவது செய்து பாருங்கள்!வாழ்க்கை அழகானதென்று உணர்வீர்கள் :)

மன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத்தெரிந்த இடங்களில் மன்னிப்பு கேட்பது தேவையற்றதே

Friday, 17 July 2015

ஒரு முனிவர் குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கும் போது,
ஒரு தேள் தண்ணீரில் தத்தளித்ததாம்

உடனே,
அதை கண்ட முனிவர்
அதை காப்பாற்ற
தேளை கையில் எடுக்க
தேள் கொட்டியதாம்.

வலி தாங்காத முனிவர்
கையை உதறும் போது
தேள் தண்ணீரில் விழுந்தது.

திரும்பவும்
முனிவர் காப்பாற்ற
தேளை எடுக்க
திரும்பவும் தேள்
கொட்டியதாம்.

இப்படியே
மாறிமாறி நடந்த நிகழ்ச்சியை
பார்துகொண்டு இருந்த
ஒருவர்,

முனிவரை பார்த்து
ஏண் முனிவரே
அந்த தேள்தான்
கொட்டிக்கொண்டே இருக்கிறதே

ஏண் அதை மீண்டும் மீண்டும்
காப்பாற்ற நினைக்கிறீர்கள்?
என கேட்டான்.

முனிவர் சொன்னார்

கொட்டுவது தேளின் குணம்,
அதை காப்பாற்றுவது மனித குணம்.

Tuesday, 14 July 2015

வாழ்க்கை என்றால் என்ன வென்று அவர்கள் அறியும் முன்னரே....
இன்று காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். காய்கடை அருகில் இருந்தது ஒரு கோழிக்கடை. அந்த கடையில் பல கோழிகளை ஒரு சிறிய கூட்டில் அடைத்து வைத்திருந்தார்கள். காற்று போகக்கூட இடம் இல்லாததுபோல் அடைக்கப் பட்டிருந்தன கோழிகள்.
கோழி வாங்க வந்த ஒருவர் அண்ணே ஒருகிலோ கோழி குடுங்க என்று கேட்டார். சட்டென்று கூட்டை திறந்து ஒரு கோழியை எடுத்து வெளியே வைத்து விட்டு கோழி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டிருந்தார் கடைக்காரர்.
அவர் கத்தியை எடுத்து கோழியை வெட்டும் முன் அந்த கோழி பறந்தோடிவிடாதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் கூட்டில் எப்படி அடைபட்டு கிடந்ததோ அதே போல் அமர்ந்தே இருந்தது அந்த கோழி. சிலை போல் அசையாமல் சோகமே உருவாக, உயிரை பறிகுடுக்க காத்துக்கொண்டிருந்தது அந்த கோழி. கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது. கடைக்காரன் கோழியை கூறுபோட்டு விற்றுவிட்டான்.
சந்தர்ப்பம் கிடைத்தும் பிழைக்கத்தேரியவில்லை, சந்தர்பத்தை தவறவிட்டது அந்த கோழி மட்டும் அல்ல...
நம் நாட்டில் பல பெண்கள் இதே போல் கூட்டில் அடைபட்ட கோழிகலாகத்தான் இருக்கிறார்கள்.
சுதந்திரம் கிடைக்கும்போது அதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று கூட தெரியாமல் சிலை போல் வாழ்ந்து வருகிறார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன வென்று அவர்கள் அறியும் முன்னரே வாழ்க்கை முடிந்து விடுகிறது.

Monday, 6 July 2015

அழமாட்டேன்னு சொல்ற எந்த ஆண்களையும்/பெண்ணையும் முதல் காதல் தோல்வி அழ வைத்துவிடுகிறது.

Sunday, 5 July 2015

என் கண்ணில் ஏனடி வந்தாய்
என் காற்றை நீ கொள்ளை கொண்டாய்
மெளனங்கள் மொழிகளின் வேசமம்மா
மறுமொழி ஒன்று பேசிடம்மா
கோபமா
ஒரு மொழி பேசம்மா
என் பாலைவனத்தில் உந்தன்
பார்வையாறு வந்து பாய்ந்திடுமா
உன் ஊடல் தீர்வதற்குள் எந்தன்
ஜீவன் மெல்ல ஓய்ந்திடுமா
உள் உயிரே உருகுதம்மா... ஆ..
விடியற்காலை 3 மணி. மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான். கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?” என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ “முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறே”ன்னு சொல்லிட்டுகதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?”
“பார்த்தீங்களா?
3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்”
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே,
“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க”
*
*
*
*
*
“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடுங்க….”
முத்தமிடும் வேளையில் என் கைபேசி உன் கன்னங்களாய் மாறிவிடுகிறது, நான் அளிக்கும் முத்தங்களின் சத்தங்கள் மட்டுமே உன்னை சேர்கிறது.



முத்தங்களை உன்னிடம் சேர்க்கும் நாளுக்காக காத்திருக்கிறது என் உதடுகள்.