Thursday, 28 May 2015

கரம்பிடித்திருந்தால்

என்னவளை கரம்பிடித்திருந்தால் கூட ! காதலின் நினைவு குழந்தைகளாக மாறி வளர்ந்திருக்கும் ! என்னவள் காலத்தால் பிரிந்ததால் ! இன்றும் இருக்கிறது இளமையாக ! இதமற்ற நரக வலிகலாக !

Monday, 25 May 2015

உன்னை அழவைக்கிறேன்!!!

உனக்காய் அழும் போதுதான்
புரிகிறது என் காதலின் ஆழம்
எனக்கு...
ஆனால் நீ அழும் போது
துடிக்கிறது என் நெஞ்சம்..
உன்னை அழவைக்கின்றேனே என்று

மயங்குகிறேன்

"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும் "ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும் "என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும் " வேணாண்டா " என திணறும்போதும் உன்னிடம் மீண்டும் மீண்டும் மயங்குகிறேன்...

Sunday, 24 May 2015

உயிருக்கும்மேலாக காதல்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்மேலாக காதல் செய்தான், ஆனால் அந்த பெண் அவனையும் அவன் செயல்களையும் கவனிப்பதாக இல்லை. . அவன் தினமும் அவளிடம் சென்று.... என்னுடன் பேசு, ஒரு தடவை புன்னகை செய் என்று அவளிடம் கெஞ்சினான், ஆனால் அவளே அதை பொருட்படுத்தாது என்னை தனியாய் இருக்க விடு என்று கோபத்துடன் கூற்னால். . அவள் கோபப்பட்டதை பொறுக்கமுடியாத அவன் தன் காத்லியை பார்த்து (அழுதபடி)எப்போது நீ புன்னகைப்பாய் என்று கேட்டான். . அதற்கும் அவள் கோபத்துடன்... நீ எப்போது இறப்பாயோ அப்போது. இப்போது என்னை தனியாய் இருக்கவிடு என்று கூறிவிட்டு சென்றால்.. (அவன் வீடு திரும்புகிறான் ) மறுநாள் காலை அவனது உடலை அவள் காணுகிறாள் உடன் ஒரு கடிதம் அதில் எழுதப்பட்டிருந்தது ....... "என்னை பற்றி உனக்கு தெரியும்." என்னவேண்டுமானாலும் செய்வேன் உன் முகத்தில் புன்னகையை காண ". .