காதலால் சதோஷம் அடைத்த இதயங்களின் கண்ணீர் துளிகள்! காதல் கதைகள், என்உயிரே,தோழி மனைவி,நம்பிக்கை, பிடித்தவர்கள் பிரிவு, மனவலிமை,புது வாழ்கை
Tuesday, 27 October 2015
Monday, 26 October 2015
Sunday, 25 October 2015
Monday, 19 October 2015
ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான்..
அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான்..
அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.
எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.
உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.
அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“.
அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.
வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.
அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.
அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன்.
மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “ என்றவாறே நடக்கலானான்.
ஓஷோ : இப்படித்தான் நம்மில் பலர் மிகச்சிறிய சந்தோசங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையே இழந்து விடுகிறோம்.
Wednesday, 14 October 2015
Tuesday, 13 October 2015
Saturday, 10 October 2015
Thursday, 8 October 2015
Wednesday, 7 October 2015
என் மகள்- தந்தை
என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து !'
பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.
அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.
மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ:
"இந்த உரையை 'எனது மகளின் புதிய குடும்பத்தினரே' என்று உங்களை வரவேற்று ஆரம்பிக்க வேண்டும் என்றே நினைத்தேன். ஆனால், அது பொருத்தமாக இருக்காது என்பதால் கடைசி நிமிடத்தில் அதை தவிர்த்துவிட்டேன். அவள் எப்போது திருமண பந்தத்தில் இணைந்தாளோ அப்பொழுதே உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவளாகிவிட்டாள். அதில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவள் உங்கள் குடும்பத்தினருக்கே எப்போதும், எதிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். இனி, இளைப்பாற விரும்புகிறோம். அதை அனுபவிக்க தயாராகிவிட்டோம். ஆனால், அதற்கு நீங்கள் அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நான் எதிர்பார்ப்பதைவிட நீங்கள் அவளை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். அவள் என் வீட்டில் துள்ளித் திரிந்ததைவிட உங்கள் வீட்டில் மகிழ்ச்சி துள்ளளோடு இருப்பாள் என நம்புகிறேன். இருந்தாலும், எல்லா சராசரி தந்தையைப் போலவும் நான் இதை திரும்பத் திரும்ப சொல்கிறேன் "தயவு செய்து அவள் மகிழ்ச்சிக்கு குறை ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்"
அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. இனியும் ஒருபோதும் பாரமாக கருத மாட்டேன். ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் இயற்கை நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டுமட்டுமே அவளை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறேன். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அந்த உலகம் என்றென்றைக்கும் அழகாக இருப்பதை நீங்களே உறுதி செய்ய வேண்டும். எனது இளவரசியை உங்களிடம் அனுப்புகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ வழிவகை செய்யுங்கள். எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது. இப்போது அவள் மாசறு பொன்னாக இருக்கிறாள்.
அவள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வரும் அன்பு, அக்கறை, அரவணைப்பு, அழகு, இதம் என எல்லாப் பண்புகளுக்கும் பரிசாக அவளுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள். ஆம், அவளை தயவுசெய்து மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதாவது அவள் சிறு தவறு செய்துவிட்டாள் என நினைத்தால் அவளை தாராளமாக திட்டுங்கள் ஆனால் அதேவேளையில், அவள் மேல் செலுத்தும் அன்பில் குறைவைக்காதீர்கள். அவள் மிகவும் நளினமானவள். அவள் எப்போதாவது துவண்டு போய் இருந்தால் அவளுடன் இருங்கள். உங்களது சிறு கவனம் அவளுக்கு போதும், ஆறுதல் தர. அவள் உடல்நலன் பாதிக்கப்பட்டால் அவள் மீது அக்கறை காட்டுங்கள். அதுவே அவளுக்கு அருமருந்து.
அவளது பொறுப்புகளில் எப்போதாவது விலகிவிட்டால் அதைச் சுட்டிக்காட்டுங்கள். அதேவேளையில், 'நீ இன்னும் வாழ்க்கையை கற்றுக் கொண்டிருக்கிறாய் என நாங்கள் நம்புகிறோம்' என அவள் உணரும்படி நடந்து கொள்ளுங்கள். அவளைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அவளை மாதக் கணக்கில் காண முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவள் குரலை தினம் தினம் கேட்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தபிறகு அவளுக்கு என் நினைவே வரவில்லை என்றால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். என் மகளின் மகிழ்ச்சி மட்டுமே என் வாழ்நாள் லட்சியம். எனவே, தயவு செய்து அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்பிற்குரிய மருமகனே...இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் 'என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' என்று சொல்லும். எனவே, தயவு செய்து எனது மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த உரையை மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தைக்கும் அர்ப்பணிக்கிறேன்.
Tuesday, 6 October 2015
Sunday, 4 October 2015
விதி
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்....ஒரு நாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.....அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்....உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி , இந்தகிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள்... கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்....
இந்திரன் , கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம் சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவர் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே ? அவரிடம் சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றி எழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு , பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்....
விஷயத்தை கேட்ட பிரம்மா , இந்திரா.... படைப்பது மட்டுமே என் வேலை...உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்...நாம் அவரிடம் சென்று உதவி கேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார்....
மஹாவிஷ்ணுவோ , உயிர்களை காப்பது நான்தான் ...ஆனால் உன் கிளி இறக்கும் தருவாயில்,இருக்கிறது.....அழிக்கும் தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்...வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார்....
விபரங்களை கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்...உயிர்களை எடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்...வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்று சொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார்....
தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதை கண்ட எமதர்மன் உடனே எழுது ஓடி வந்து வரவேற்கிறார்..விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில் , . எந்த சூழ் நிலையில் , என்ன காரணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்..அந்த ஓலை அறுந்து விழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்....வாருங்கள் அந்த அறைக்குசென்று , கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்....
இப்படியாக , இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்... ....அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது...உடனே அவர்கள் அவசரமாக சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்..அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.....அவசரமாக அதைப்படித்து பார்க்கின்றனர்....
அதில்......
இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எமதர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ , அப்போது இந்த கிளி இறந்துவிடும்..... என்று எழுதப்பட்டிருந்தது...... இதுதான் விதி என்பதோ?
Saturday, 3 October 2015
தில்லிருந்தா படிங்க......
நேற்றிரவு,
தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள்.
"ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது....
அது எப்ப அப்பா தூங்கும்?"
"அது தூக்கம் வரும்போது தூங்கும்..."
"எப்ப தூக்கம் வரும்பா?"
"அது சாப்பிட்டவுடன் தூங்கும்..."
"கொசுக்கு வீடு எங்கப்பா?"
"அதுக்கு வீடே இல்லை..."
"ஏம்பா வீடே இல்லை?"
"அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..."
"நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....."
"இது அப்பா உனக்கு கட்டி தந்தது..."
"அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா."
"அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா
அதான் அதுக்கு வீடு இல்ல..."
"கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?"
"கடவுள்..."
"கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?"
"கடிக்காது..."
"ஏம்பா கடிக்காது?"
"கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..."
"அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?"
"வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..."
"கடவுள் நல்லவராப்பா?"
"ரொம்ப நல்லவர்...."
"அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?"
"அது அப்படித்தான் நீ தூங்கு..."
"கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?"
"அதுக்கு பசிக்குது..."
"கொசு இட்லி சாப்பிடுமா?"
"அதெல்லாம் பிடிக்காது..."
"கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?"
"வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..."
"ஒரே ஒரு கேள்வி அப்பா ?"
"கேட்டுத் தொலை"
"கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?"
"அதுக்கு பல்லே இல்லை..."
"பிறகு எப்படி கடிக்கும்?"
"அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..."
"பேயைக் கொசு கடிக்குமா அப்பா?"
"இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??"
"நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?"
இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு
போகலாம்னு முடிவு பண்ணி, வேலை
தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்!