Saturday, 27 June 2015

தன் மனைவி தன் உறவுகளுடன் அன்பாக இருக்கணும்னு நினைக்கும் கணவனுக்கு மனைவியின் உறவுகள் மட்டும் கண்ணுக்குத் தெரியாது
உலகத்தையே நமக்கு அறிமுகப்படுத்திய தந்தையிடம்.... "அதெல்லாம் ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது" எனும் வார்த்தை எவ்வளவு புண்படுத்தியிருக்கும்...
கோயிலில் கடவுளை தரிசிக்கவே குறுக்கு வழியில் பணம் கொடுத்து போகிறவன் எப்படி நேர் வழியில் பணம் சம்பாதித்திருக்க முடியும்
ஒரு காதலையேனும் சுகிக்காமல் ஒரு துரோகத்தையேனும் அனுபவிக்காமல் ஒரு தோல்வியையேனும் தழுவாமல் அண்டவிடாதீர்கள் மரணத்தை அது பிணமாய் வாழ்ந்த தடம்
உங்க நேரத்தை மதிக்கிற மாதிரி அடுத்தவங்க நேரத்தையும் கொஞ்சமாவது மதிக்க கத்துக்கோங்க
வரதட்சணை எதுக்குனு கேட்டா கௌரவத்துக்கு ன்னு சொல்றானுக அப்போ அதுக்கு முன்னாடி மானங்கெட்டு திரிஞ்சிருப்பானுக போல..
சாணியை மிதிச்சா கால கழுவீட்டு போய்கிட்டே இருக்கனும்.. எருமைகிட்டே போய் இங்கே சாணி போடாதேன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணப்படாது
சாணியை மிதிச்சா கால கழுவீட்டு போய்கிட்டே இருக்கனும்.. எருமைகிட்டே போய் இங்கே சாணி போடாதேன்னு அட்வைஸ் எல்லாம் பண்ணப்படாது
நினைச்சு நினைச்ச சிரிச்சு புன்னகைக்க நிறைய விஷயங்கள் இருக்குதோ இல்லையோ,புழுங்கி,அழுது வேதனைப்படுறதுக்கு மட்டும் ஆயிரம் விஷயங்கள் இருக்கும்..

Friday, 26 June 2015

ஆண்களின் சிரிப்பை விட
பெண்களின் புன்னகை அழகானது

ஆனால் பெண்களின் கண்ணீரை விட
ஆண்களின் ஒரு துளி
கண்ணீர் வலி நிறைந்தது.

எந்தவித இடையூறும் இன்றி சுயமாய் சிந்தித்து முடிவெடுக்கவும், நம் விருப்பப்படி நேரத்தை செலவுசெய்யவும் தனிமை அவசியமாகின்றது!

மழைத்துளிகளும் நனைந்து போகும்
தேங்கி இருக்கும் நீரினுள் விழுகையில்!

உண்மையான அன்பு போரடிக்காது...!எதொவொரு நோக்கில் செய்யப்படும் அன்பு சலித்து விடும்..

போரடிக்காத அளவு அன்பு செலுத்தக் கற்க வேண்டும்

மக்காது எனத் தெரிந்தும் பிளாஸ்டிக்கை உபயோகிக்கறங்களை மக்குனு ஏன் சொல்லக்கூடாது...

தான் கேட்கும் எந்த கேள்விக்கும் முதல் பதிலில் திருப்தி அடையாதவள்தான் காதலி!

தலைமைத்துவம்

குரலை உயர்த்திப் பேசுவது தலைமைத்துவம் அல்ல. நாம் பேசத்தொடங்கும் போது மற்றவர் குரல்கள் அடங்குவது தான் தலைமைத்துவம்

முன்னாலையே கேட்கும் மன்னிப்பிற்கு பிறகு வரும் வார்த்தைகள் மன்னிக்க முடியாததாகவே இருக்கும்

Love Wins

நமக்கு ஒருத்தரை பிடிச்சதுனா யார் என்ன சொன்னாலும் அவங்க தான் பிடிக்கும்னு ஸ்ட்ராங்கா சொல்லிடணும்,

தாய் நாடு

இதுதான் இந்தியாவின் தியாகம். நியாயமும்கூட...
ஒவ்வொரு இந்தியனுக்கும், இது நமது தேசம்.. இது நமது தாய் நாடு... என்ற எண்ணம் எழுவதுதான் நம் தாய்க்கு நாம் செலுத்தும் காணிக்கை.... பாசம் காட்டுவதில் இனம், மொழி, மதங்கள் என்னும் வேறுபாடுகள் வேண்டாவே வேண்டாமே.

Tuesday, 23 June 2015

ஆண்களை அதிகம் திணற வைத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்
நான் முக்கியமா?
இல்லை உங்க வேலை முக்கியமா?

நூறு முறை அல்ல ஆயிரம் முறை நான் வருவேன் உன் நினைவில் என் காதல் உண்மையானால் .

Monday, 22 June 2015

மதம்

ஒரு குட்டி கதை..... ( படித்ததில் பிடித்தது )
ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன, திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன அங்கு சில புறாக்கள் இருந்ததன அவைகளோடு இந்த புறாக்களும் அங்கு குடியேறின.
சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது இப்போது இங்கு இருந்து சென்ற பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடி பறந்தன .
வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.
கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது "ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?" என்று...
அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம் இங்கு இருந்த போதும் புறா தான், தேவாலயத்துக்கு போனபோதும் புறா தான், மசூதிக்கு போன போதும் புறா தான் ",
"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;
குழம்பிய குட்டி புறா
"அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.
அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால் தான் நாம் மேலே இருக்கிறோம், இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது..

Friday, 19 June 2015

முயற்சி

பத்து முறை விழுந்தவனை
பார்த்துச் சொன்னாள் பூமித்தாய்,
ஒன்பது முறை எழுந்தவனே… !
இன்னும் ஒரு முறை
முயன்று பாரேன் என்று … !
... முயற்சி…

இதுதான் அடிப்படை, அஸ்திவாரம், ஆதாரம் எல்லாமே...

Thursday, 18 June 2015

காதல் கூட துரோகம் தான் பெற்றவர்களை துக்கி எறிந்து விட்டு  செல்கையில்..,..

உண்மை தானே நண்பர்களே

கிராமமும் நகரமும்

கிராமமும் நகரமும் ....
வெற்றிலை_பாக்கு போட்டால்
கிராமத்தான்
பீடா போட்டால் நகரத்தான்
பச்சை குத்தினால் கிராமத்தான்
டாட்டூ போட்டு கொண்டால்
நகரத்தான்
மருதாணி வைத்துக் கொண்டால்
கிராமம்
மெஹந்தி என்றால் நகரம்
மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம்
Chemical பொடி தூவினால் நகரம்
90களில் மஞ்ச பச்சை சட்டை
போட்டா அவன் கிராமம்
2015ல் மஞ்சள் பச்சை சட்டை
போட்டால் நகரம்
மங்களமான மஞ்சப்பை என்றால்
கிராமம்
மண்ணை மலடாக்கும் பாலித்தீன்
என்றால் நகரம்
தன் மனைவியை நண்பர்களுக்கு
அறிமுகம் செய்தால் கிராமம்
மனைவி அவள் நண்பா்களை
அறிமுகம் செய்தால் நகரம்
கிழிந்த ஆடை போட்டால் கிராமம்
நல்ல ஆடையை கிழித்து போட்டால்
நகரம்
உதவிக்கு மிதிவண்டி இருந்தால்
கிராமம்
உடம்பைக் குறைக்க மிதிவண்டி
இருந்தால் நகரம்
கோடு போட்ட அண்டர் வேர்
தெரிந்தால் அவன் கிராமம்
இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட்
அணிந்தால் அவன் நகரம்..
எது நாகரீகம்

என்னுடையது என்று எதுவும் இல்லையா?

கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.

கடவுள்: "வா மகனே.......

.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."

ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?

இவ்வளவு சீக்கிரமாகவா?

என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"

"மன்னித்துவிடு மகனே........

உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."

"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"

"உன்னுடைய உடைமைகள்........."

"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"

"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."

"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"

"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........

அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."

"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........

குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."

"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"

"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"

"என் உடல்?..........."

"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."

"என் ஆன்மா?"

"இல்லை........அது என்னுடையது.........."

மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........

கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,

கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.

நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.

வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.

ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் அதற்க்கான செயல்களை மட்டும் செய்.

எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"

-- ஒவ்வொரு நொடியும் வாழ்

-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்

-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......

.அது மட்டுமே நிரந்தரம்.......

-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

சிதறல்

🚩🚩தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்
                                            -பகவத் கீதை

🚩🚩யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்
                                                                                             -கண்ணதாசன்

🚩🚩வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை
                                                                - A .P . J . அப்துல்கலாம்

🚩🚩ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று யோசித்து பார்
நீ
ஜெயித்து விடுவாய்
                                                                 -ஹிட்லர்

🚩🚩அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
                                                                   -A .R . ரகுமான்

🚩🚩தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்
வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்
                                                                               -நெப்போலியன்

🚩🚩கோவம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு
உனக்கு நீயே
கொடுத்து கொள்ளும் தண்டனை
                                                                            -புத்தர்

🚩🚩விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள்
உறங்குவது இல்லை.
                                                    -காரல் மாக்ஸ்

🚩🚩வெற்றி இல்லாத வாழ்கை இல்லை
வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை
                                                                          -பில்கேட்ஸ்

🚩🚩வெற்றிகளை சந்த்தித்தவன் இதயம்
பூவை போல் மென்மையானது
தோல்வி மட்டுமே சந்த்தித்தவன் இதயம்
இரும்பை விட வலிமையானது
                                                                          -விவேகானந்தர்

🚩🚩நீ பட்ட துன்பத்தை விட
அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது
                                                                      -விவேகானந்தர்

🚩🚩தோல்விக்கு இரண்டு காரணம்
ஓன்று
யோசிக்காமல் செய்வது
இரண்டு
யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது
                                                                -ஸ்ரீ கிருஷ்ணர்

🚩🚩பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை
பெண்களே இல்லை என்றால்
ஆறுதலே தேவை இல்லை
                                                            -சார்லி சாப்பிளின்

🚩🚩உன்னை குறை கூறும் பலருக்கு
உத்தமனாக வாழ்வதைவிட
உன்னை நம்பும் சிலருக்கு
நல்லவனாய் இரு
                                                             -பெயர் தெரியாத பெரியவன்

🚩🚩வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம்
வெற்றி
சிரித்து மகிழ வைக்கும்
தோல்வி
சிந்தித்து வாழ வைக்கும்
                                                            -பெயர் தெரியாத பெரியவன்

🚩🚩சிரிப்பவர்கள் எல்லோரும்
கவலை இன்றி வாழ்பவர்கள் இல்லை
கவலையை மறக்க
கற்று கொண்டவர்கள்
                                                                -பெயர் தெரியாத பெரியவன்

🌹🌹பூக்களாக இருக்காதே
உதிர்ந்து விடுவாய்
செடிகளாக இரு
அப்போதுதான்
பூத்து கொண்டே இருப்பாய்
                                                                         -விவேகானந்தர்

💚💚எல்லோருக்கும் அன்பை கொடுத்து
ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை பெற்று
ஏமாற்றி விடாதே
                                                                                      -விவேகானந்தர்

Wednesday, 17 June 2015

அழகு

32 வயதுப் பெண்மணி ஒருத்திக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்தது . கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புக்குப் போன ஒரு தருணத்தில் அவள் கடவுளைக் கண்டாள் .
' என் காலம் முடிந்துவிட்டதா ?' என்று துக்கத்துடன் கேட்டாள் கடவுளிடம் .
"இல்லை... இல்லை. உனக்கு இன்னும் 38 வருடங்கள், ஏழு மாதம், எட்டு நாட்கள் இருக்கின்றன ." என்றார் கடவுள் .
இதய சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது . பிழைத்து விழித்ததும் , அந்தப் பெண்மணி காஸ்மெடிக் சர்ஜனை வரவழைத்தாள் .
' என் மூக்கைச் சற்று நிமிர்த்தி, தொங்கிப் போன கன்னச் சதைகளை இழுத்துத் தைத்து, முகத்தை அழகாக்கி விடுங்கள் . தொய்ந்து போன அங்கங்களைத் திடமாக்கி , என் தொப்பைக் கொழுப்பை அகற்றிவிடுங்கள் . என் அழகுக்கு இங்கே இன்னும் பல வருடங்கள் வேலை இருக்கிறது .' என்றாள் .
ஏராளமான செலவில் அவள் விரும்பியபடி அவள் தோற்றம் மாற்றப்பட்டது . கூந்தலின் நிறத்தைக்கூட மாற்றிக் கொண்டாள் அவள் .
எல்லாம் முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டாள் . இளைஞர்களின் கண்கள்கூட அவளையே மொய்ப்பதை ரசித்துக்கொண்டு தெருவைக் கடந்தாள் . வேகமாக வந்த லாரி ஒன்றின் கீழ் சிக்கினாள் . தலத்திலேயே உயிர் இழந்தாள் .
கடவுளின் முன் கொண்டு போகப் பட்டாள் .
" எனக்கு இன்னும் 38 வருடங்கள் இருப்பதாகச் சொன்ன நீங்கள் , லாரியில் இருந்து என்னை இழுத்துக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?" என்று கோபமாகக் கேட்டாள் .
" அட, நீயா அது ? அடையாலம் தெரியாமல் போய்விட்டதே !" என்றார் கடவுள் .

என் தோழி

இது மட்டும் புரியவில்லை ஏனோ?
Watsap chat-ல்லோ,
Messenger,hike-கிலோ
Hi என்று Text செய்து நீ
அழைத்ததுமில்லை..
பிறந்தநாள் வாழ்த்தோ!
புதுவருட வாழ்த்தோ!
நடுஇரவில் எழுப்பி நீ செய்ததுமில்லை..
செய்த சொதப்பலோ,
வாங்கிய மொக்கையோ,
சொல்லிக்காட்டி என்னை கலாய்ததுமில்லை நீ..
அனிரூத் இசையோ,
கெஜ்ரிவால் வெற்றியோ, விவாதங்கள்
நமக்கிடையே இருந்ததேயில்லை...
பேருந்தில் அழகியோ,
வகுப்பினில் குறும்போ,
எதையும் உன்னிடம் பகிர்ந்ததேயில்லை நான்...
என் நண்பர்கள் பட்டியலில்
என்றுமே உன் பெயர்
இடம்பெற்றதேயில்லை...
இருந்தும் நீ எப்படிதான்
என் சிறந்த தோழியாக...

Tuesday, 16 June 2015

தோல்வி

புரிதல் இல்லை!
புரிய வைக்கவும் தெரிய வில்லை
தோல்வி அடைந்தேன்
யாரும்  காத்திரு வில்லை காதல் காயம்

என்னை ஒரு நொடியாவது நீ பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்…

கனவிலாவது வந்து பார்ப்பேன் என்று உறுதி கொடு எனக்கு உனக்காக உறங்கிக்கொண்டிருபேன்
என் வாழ்கை முழுவதும்….

காதல் நட்பு

அன்று அழுததை நினைத்தால்
சிரிப்புத்தான் வரும் \"காதல்\".

அன்று சிரித்ததை நினைத்தால்
அழுகை தான் வரும் \"நட்பு\".

Monday, 15 June 2015

மூக்குத்தி

நான் ஒரு பெண்ணுடன் நட்புடன்
பழகி வந்தேன்.
அந்த
பெண்ணுக்கு திருமணம்
நிச்சயமானபின் மூக்குத்தி அணிய
தொடங்கினாள்.
அதுவரை நான் பார்த்த
அவளுக்கும் மூக்குத்தியுடன்பார்த்த
அவளுக்கும் நிறைய வித்தியாசமாக
தெரிந்தது. அவ்வளவு அழகாக
தோன்றினாள்.
நீ முன்பே மூக்குத்தி அணிந்திருந்தால்
நானே உன்னை பெண்
கேட்டு வந்திருப்பேன்
என்று அவளிடம் கூறினேன்.
அதற்கு அவள் சொன்ன பதில்
வாழ்நாள் முழுவதும் மறக்க
முடியாததாக அமைந்துவிட்டது.
"நீ முன்பே சொல்லியிருந்தால் நான்
அணிந்திருப்பேனே"

Tuesday, 9 June 2015

மலர்

எனக்காக நீ 
மலர் பறித்து மலர் பறித்தே 
பூமியில் மலர் இன்றி போனது,,,
இப்போது பார்,,, 
உன்னால் பாதி பெண்களும் 
மலர் சூடுவதையே 
மறந்து போய்
தலைவிரி கோலமாய் 
நடக்கின்றனர்...