பெரும்பாலான மறுக்க முடியாத உண்மைகள்!!
அம்மா அப்பாவை தெய்வமாக மதிக்க வேண்டும் என்று தன் குழந்தைக்கு போதிக்கும் பெரும்பாலான பெண்கள் அதை தன் கணவன் அவன் பெற்றோருக்கு செய்யும் போது கோபித்து கொள்கிறார்கள்.
## என்ன உங்க அம்மாவை பார்த்து ஈஈனு இளிப்பு?? வாய மூடுங்க.
----------------------------------------------------------------------------------------------------------------------
தன் அக்கா/தங்கை இரவில் 11 மணிக்கு மேல் யாரிடமும் போன் பேசகூடாது என்று அக்கறை படும் பெரும்பாலான ஆண்கள், அடுத்தவன் அக்கா/தங்கைகளுக்கு full night போன் பண்ணி கடலை போடுறாங்க.
##ஏண்டா உங்களுக்கு வந்தா அது ரத்தம், அதே அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா??
---------------------------------------------------------------------------------------------------------------------
காதல் படங்களை பார்த்து ரசிக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் மகன்/மகள் யாரையாவது காதலித்தால், அரிவாள் எடுத்து வெட்ட வராங்க.
##உங்களுக்கு என்னதான் பிரச்சன? புள்ளைங்க மேல நம்பிக்கை இல்லையா, இல்ல காதல் மேல நம்பிக்கை இல்லையா? சொல்லுங்க யுவர் honor.
---------------------------------------------------------------------------------------------------------------------
சாதிகள் இல்லையடி பாப்பா என்று போதிக்கும் பெரும்பாலான ஆசிரிய பெருமக்கள், தாழ்த்தப்பட்ட ஜாதியில் திருமணம் செய்து கொள்ள முன் வருவதில்லை. இன்னும் சொல்வதென்றால் ஒருசிலர் அவர்களை தன் வீட்டுக்குள் வர கூட அனுமதிபதில்லை.
##நீங்க பாடம் நடத்துறதோட சரியா ? எதையும் implement பண்ணமாட்டிங்களா?
----------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா அப்பாவ விட்டுட்டு வா நான் உன்ன கண்கலங்காம பாத்துகுரேன்னு பொங்கும் எந்த காதலனும், தன் பெற்றோரை விட்டுவிட்டு வர நினைப்பதில்லை.
##“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ – என்பது நம்ம பசங்களுக்கு மட்டும் தான் போல.
---------------------------------------------------------------------------------------------------------------------
இதையும் தாண்டி இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருகின்றனர் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
No comments:
Post a Comment