வாழ்க்கை என்றால் என்ன வென்று அவர்கள் அறியும் முன்னரே....
இன்று காய்கறிகள் வாங்க கடைக்கு சென்றிருந்தேன். காய்கடை அருகில் இருந்தது ஒரு கோழிக்கடை. அந்த கடையில் பல கோழிகளை ஒரு சிறிய கூட்டில் அடைத்து வைத்திருந்தார்கள். காற்று போகக்கூட இடம் இல்லாததுபோல் அடைக்கப் பட்டிருந்தன கோழிகள்.
கோழி வாங்க வந்த ஒருவர் அண்ணே ஒருகிலோ கோழி குடுங்க என்று கேட்டார். சட்டென்று கூட்டை திறந்து ஒரு கோழியை எடுத்து வெளியே வைத்து விட்டு கோழி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டிருந்தார் கடைக்காரர்.
அவர் கத்தியை எடுத்து கோழியை வெட்டும் முன் அந்த கோழி பறந்தோடிவிடாதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் கூட்டில் எப்படி அடைபட்டு கிடந்ததோ அதே போல் அமர்ந்தே இருந்தது அந்த கோழி. சிலை போல் அசையாமல் சோகமே உருவாக, உயிரை பறிகுடுக்க காத்துக்கொண்டிருந்தது அந்த கோழி. கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது. கடைக்காரன் கோழியை கூறுபோட்டு விற்றுவிட்டான்.
சந்தர்ப்பம் கிடைத்தும் பிழைக்கத்தேரியவில்லை, சந்தர்பத்தை தவறவிட்டது அந்த கோழி மட்டும் அல்ல...
நம் நாட்டில் பல பெண்கள் இதே போல் கூட்டில் அடைபட்ட கோழிகலாகத்தான் இருக்கிறார்கள்.
சுதந்திரம் கிடைக்கும்போது அதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று கூட தெரியாமல் சிலை போல் வாழ்ந்து வருகிறார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன வென்று அவர்கள் அறியும் முன்னரே வாழ்க்கை முடிந்து விடுகிறது.
காதலால் சதோஷம் அடைத்த இதயங்களின் கண்ணீர் துளிகள்! காதல் கதைகள், என்உயிரே,தோழி மனைவி,நம்பிக்கை, பிடித்தவர்கள் பிரிவு, மனவலிமை,புது வாழ்கை
Tuesday, 14 July 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment